Skip to main content
நோய் வராமல் நலமாக வாழ 10 வழிமுறைகள்:
நோய் வராமல் நலமாக வாழ 10 வழிமுறைகள் :
1). தினந்தோறும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும்.

2).மலம்
நிவர்த்தி செய்ய வேண்டும். மலச்சிக்கல் உள்ளவை ராயின் எழுந்தவுடன்
பல்துலக்கி, தண்ணீர் அல்லது வெந்நீர் 300 கிராம் அருந்தி விட்டு சிறிது
தூரம் நடந்தால் மலச்சிக்கல் நிவர்த்தியாகும்.
3).பல் நன்றாக துவக்க வேண்டும். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி ஆகவே ஆலமரக்குச்சி அல்லது வேலங்குச்சியினால் பல்துலக்குதல் நல்லது.
4).குளிர்ந்த தண்ணீர் அல்லது வெந்நீரில் நீராட வேண்டும். தலையை நீக்கி நீராட கூடாது. சுத்தமான உயர்ந்த துணியில் துவட்டி கொள்ள வேண்டும்.
5).கடவுள் வழிபாடு உள்ளத்திற்கு அமைதியை தரும். தியானம் நல்லது.
6).சிற்றுண்டி உண்ட பிறகே வேலைய தொடங்க வேண்டும். உணவு அருந்தும் போது பேசவே கூடாது. உணவை நன்று மென்று சாப்பிட வேண்டும்.
7).தண்ணீரை கொதிக்க வைத்து பின் குளிர்ந்த நிலையில் பருந்துவது நல்லது.
8).தினச்சரி உணவில் காய்கறிகள் , பழங்கள், பால், மோர், தயிர் சேர்த்து கொள்ளுதல் அவசியம்.

9).வாரம் இருமுறையாவது அல்லது சனிக்கிழமையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வேண்டும்.
10).ஆண்கள் இடப்புறம், பெண்கள் வலதுபுறம் படுத்து தூங்க வேண்டும்.உண்ட உணவு சுலபமாக சீரனமாகும்.
Comments
Post a Comment